திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி, (20.05.2026) அன்று அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வினை நடத்துவதற்கு, தீபக் ராஜா குடும்ப உறுப்பினர்கள் மாவட்ட காவல்துறையிடம் மனு அளித்த நிலையில், நினைவஞ்சலி விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் உறவினர்கள் தவிர, வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற விபரம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் உத்தரவினை மீறி, வெளியூரிலிருந்து அல்லது அண்டை மாவட்டங்களில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வருவோர் தடுக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அவர்கள் பயணம் செய்து வரும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இந் நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக காவல்துறையின் உத்தரவுகளை தவறாக சித்தரித்து, பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் பகிரப்படும் பட்சத்தில், அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாக்க, பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார், இ.கா.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















