நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) முனைவர் திரு. விஜயராகவன் அவர்கள் தலைமையில், குமாரபாளையம் காவேரி நகரில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியம், அவர்களுக்கு உரிய பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு வழங்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன. அத்துடன், அவசர காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய உதவி எண்களான குழந்தைகள் உதவி எண் 1098, மகளிர் உதவி எண் 181 மற்றும் காவல்துறை அவசர உதவி எண் 100 ஆகிய சேவைகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.




















