திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில், வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நெக்னாமலை, பாப்பனேரி, ஓசி குப்பம், வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் சி.எம். புதூர் கிராமம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பாலியல் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்களை உடனடியாக புகாரளிப்பதன் அவசியம், 1091 பெண்கள் உதவி எண், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணத் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது, பாதுகாப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




















