திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில், (26.07.2026) அன்று கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் திரு. தம்பிதுரை தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அருண்குமார் (23), த/பெ. ரமேஷ், வாணியம்பாடியைச் சேர்ந்தவர், கஞ்சா பயன்படுத்திக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. குற்றவாளியை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 4 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், எதிரி மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை பாராட்டினார்.




















