மதுரை: மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் சுற்றுச்சூழல் உறுதிமொழி வாசித்தார். மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. விடுதி செயலாளர் சீனிவாசன், பொறுப்பாளர் கார்த்தி, அல்அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் நபி, ஆனையூர் அரசு பள்ளி ஆசிரியர் ஹரிபாபு, மரங்கள் மீட்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















