சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கஞ்சா கருப்பு அவர்களின் உடன்பிறந்த சகோதரரான அறிவழகன் (45), ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர். இவர் இன்று அதிகாலை சிவகங்கை பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அறிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்குக் காரணமான வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















