திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த எலிசபெத்ராஜாமணி(75). இவரது வீட்டில் லைன் தெருவை சேர்ந்த பாண்டி மனைவி மீனா(53) என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த 2.1/2 பவுன் தங்க வளையல் திருடு போனது. அந்த சமயம் வீட்டில் மீனா மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இதை தொடர்ந்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வீட்டில் வேலை பார்த்த மீனா தங்க வளையலை திருடியது தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் மீனாவை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















