திருநெல்வேலி: திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் சரோஜினி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன்(58). இவர், கடந்த மாதம் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது இவரது வீட்டிற்குள் புகுந்து 22 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். மேலும், அதேபகுதி தனலட்சுமி நகரைச் சேர்ந்த ரகு என்பவரின் இருசக்கர வாகனத்தையும், கலைக்கோயில் நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த தங்க நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகார்களின் பேரில் சிவந்திப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்ததில் இத்தொடர் திருட்டில் ஈடுபட்டது. பாளையங்கோட்டை அருகேயுள்ள உத்தமபாண்டியன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சூர்யா (21). என்பது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















