தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல் அதிகாரிகளுடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், A.மயில்வாகனன், இ.கா.ப., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















