தென்காசி: தென்காசி மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவில் பணிக்கு பயன்படுத்திய 170 பாதுகாப்பு உபகரணங்கள் வரும் (25.06.2026) அன்று காலை 11 மணிக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது ஏலம் விட அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலோக கண்டறிதல் இயந்திரம், தேடுதலுக்கு பயன்படுத்தும் கண்ணாடி, தொலைநோக்கி, வீடியோ கேமரா, தேடல் விளக்கு போன்ற 170 பொருட்கள் கழிவு செய்யப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் (25.06.2026) அன்று காலை 11 மணிக்கு காலதாமதம் இன்றி கலந்து கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் கிடையாது.
ஏலம் தொடர்பான விபரங்களுக்கு 9445797556 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















