தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார் துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பொது இடத்தில் பெண்கள் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்கவும், அவசர காலத்தில் அவர்களுக்கு உடனடி உதவி வழங்கவும், பெண்களுக்கான இந்த சிறப்பு அதிரடிப்படை தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்கள், கோவில், பேருந்து நிலையம் போன்ற பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















