தென்காசி: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அசோக் குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (11.06.2026) மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டனர். மாவட்டத்தின் முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பிரச்சனைக்குரிய பகுதிகளில் நடைபெற்ற இந்த ரோந்துப் பணியில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய காவல்துறையினர், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். சமூக விரோத செயல்கள் மற்றும் குற்றச் செயல்களை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















