திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல் துணை ஆணையராக எஸ். சரவணன், ஐ.கா.ப., அவர்கள் (18.06.2026) அன்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன்பு பல்வேறு காவல் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ள அவர், தற்போது திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரகத்தின் கிழக்கு பிரிவின் காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாநகர பகுதியில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த காவல் சேவைகளை திறம்பட மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















