திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் ஊரகம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், வள்ளியூர், நான்குனேரி என 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், மாநகரில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் என 2 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து வழக்குகள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி நகரத்தில் 3 இளைஞர்கள், ஒரு முதியவர் என 4 பேர், பாளையங்கோட்டையில் 2 இளைஞர்கள், திருநெல்வேலி ஊரகத்தில் 6 பேர், நான்குனேரி, சேரன்மகாதேவியில் தலா 2 பேர், அம்பாசமுத்திரத்தில் 3 பேர் என மொத்தம் 19 பேர் கடந்த 20 நாட்களில் போக்சோ வழக்குகளில் கைதாகியுள்ளனர். இது போன்று பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட, மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















