மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டத்தில் சிலர் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்று (06.08.2026)-ந் தேதி காலை, தனித்தனியே சிறப்புப்படை அமைக்கப்பட்டு குழுவினர் சம்பவ இடங்களுக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருச்சி to மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள மேலூர் சிட்டம்பட்டி டோல்கேட்டின் அருகில் போலியான பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்த நபர்கள் தப்பியோட முயன்ற நிலையில், திலீப் குமார் (28). த/பெ. மண்ணாரம், காஞ்சி காவாஸ், இராஜஸ்தான். நிலேஷ் சிங் ராஜ்புரோகித் (23), த/பெ. ஜெத்துசிங் ராஜ்புரோகித், சவோகி கலி ஜெராலி, இராஜஸ்தான் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 25 மூடை கணேஷ் புகையிலை மற்றும் 3 மூடை கூலிப், 10 பொட்டலங்கள் விமல் மற்றும் V1 பாக்குகள் (மொத்த எடை 300 கிலோ புகையிலைப் பொருட்கள்), GJ 09 CY 7543 Creta Car (போலியான பதிவு எண் – TN 09 CY 7541) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (Tobacco Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட காவல்துறை, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















