திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த (42). வயது பெண்ணும் சென்னையை சேர்ந்த சுதாகர்(35) என்பவரும் facebook மூலம் பழகியதாக கூறப்படுகிறது இந்நிலையில் சுதாகர் திண்டுக்கல் வந்ததாகவும் அதனைத்தொடர்ந்து வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரெய்கானா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சுதாகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















