திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டியை அடுத்த ராகலாபுரம், புங்கம்பாடியை சேர்ந்த மைக்கேல்ராஜ் மகன் கெல்வின் அன்புச்செல்வன்(16). இவர் திருச்சி ரோடு, NGO-காலனி பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் உறவினர்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தபோது விளையாட்டுத்தனமாக தகர பந்தல் மேற் கூரையில் ஏறும்போது வழுக்கி விழுந்து மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















