திண்டுக்கல் : திண்டுக்கல் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ,டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில்,எஸ்.பி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பாதாள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டைல்ஸ் சாகுல் (27). ரவுண்ட் ரோடு எழில் நகரைச் சேர்ந்த ஷேக் பரித் (21). என்பதும் காரில் 2 வாள், போதை தரும் மருந்துகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டைல்ஸ் சாகுல் திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை வழக்கிலும்,சேக் பரீத் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















