திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் ஆம்பூர் மற்றும் உமராபாத் பகுதிகளில் பெண்கள், மாணவிகள், தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக சட்ட விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, இணையவழி மோசடி தடுப்பு, அவசர உதவி எண்கள் மற்றும் காவல்துறையின் சேவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்று காவல்துறையின் பாதுகாப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர்.




















