திருப்பத்தூர்: பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்ற தீவிர நடை ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, (11.07.2026) மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒருங்கிணைந்த தொடர் நடை ரோந்து நடத்தப்பட்டது. குற்றத் தடுப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பொதுமக்களுடன் நேரடி தொடர்பை மேம்படுத்தும் வகையில் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




















