திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கு ADGP. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக சட்டம் ஒழுங்கு ADGP. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அவர்களுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார். மேலும் நகர் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை குறித்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் DIG.அபினவ்குமார் (பொறுப்பு), திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது நகர் DSP. கார்த்திக், புறநகர் DSP. சிபி சாய் சௌந்தர்யன், தனிப்பிரிவு ஆய்வாளர் பாஸ்டின் தினகரன், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















