திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா ப்ரீத்தா தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஸ்வரன் விவேக்ராஜ் லோகேஷ் ஆகியோர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் வண்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் வெளி மாநில மது பாட்டில்கள் ஆகிய பொருட்களுக்கு எதிராக சோதனை நடத்தினர். அதில் கரூர்- திண்டுக்கல் இரயில் நிலையங்களுக்கு இடையே முன்னால் உள்ள முன்பதிவு இல்லா இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்தா பேக்கை எடுத்து சோதனை செய்து பார்த்த போது சுமார் 09 கிலோ கிராம் மதிக்கத்தக்க கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சா வை கைப்பற்றி திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















