திருச்சி: வெளி மாநிலத்திலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்து மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி பகுதிகளில் கடைகளுக்கு விநியோகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 23 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.2,38,740 பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.



















