சிவகங்கை : தேவகோட்டை நகரின் மாந்தோப்பு வீதியில் செயல்பட்டு வந்த அமரன் மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோதமாக சீட்டு சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவகோட்டை நகர காவல் நிலையம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பின் போது சந்திரசேகரன் தலைமையில் 18 பேர் சட்டத்திற்கு புறம்பாக சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 18 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















