திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சிறார்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வி.பிரசன்னகுமார், இ.கா.ப., தெரிவித்துள்ளார். திருநெல்வேலி அருகே புறகாவல் நிலையம் மீது இரு நாட்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மூன்று சிறுவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மது அருந்திவிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், சினிமாவை பார்த்து இது போன்ற பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாகவும் அதனை காவல் நிலையம் மீது வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்களுக்கு வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, அவர்கள் பிளஸ் 1 படிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பது, அத்தகைய செயல்களால் எதிர்கொள்ளும் விளைவுகள் மற்றும் போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்பு, எதிர்கால நலனுக்காக கல்வியில் கவனம் செலுத்துவதன் அவசியம் ஆகியவை குறித்து பள்ளி மாணவர்களுக்கு தொடர் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















