திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர், சாந்தி, தலைமை காவலர், மாலதி நாங்குநேரி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர், ஆபிரகாம் மற்றும் தலைமை காவலர், விஜய் ஆகியோரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















