தேனி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மத்திய பாதுகாப்பு படையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹாப்ரியா பாராட்டு தெரிவித்தார். தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதல், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். அவர்களின் சேவையை பாராட்டும் வகையில், மத்திய பாதுகாப்பு படையினருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி எஸ்பி வாழ்த்துகளை தெரிவித்தார்.




















