தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (01.06.2026) தீர்ப்பு வழங்கியது. மேற்படி வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு. சிவநேசமாணிக்கம் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் (03.06.2026) நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.




















