திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர சிங்கப்பெண் சிறப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் டவுண் ஆர்ச் அருகில் நள்ளிரவில் தனியாக இருந்த பெண்ணை மீட்டு, அவரை (One Stop Center) ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைத்தனர். பின்னர் CCTNS வலைத்தளம் மூலம் காணாமல் போனவர்களின் தகவல்களை பெற்றதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த ஏழு மாதங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்துள்ளார். என்பது தெரிய வந்தது. இது குறித்து சிங்கப்பெண் அதிரடி படையினர் விரைவாக செயல்பட்டு, அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வரவழைத்து மனநலம் குன்றிய பெண்மணியை அவரது குடும்பத்தினருடன் பாதுக்காப்பாக (16.06.26) அன்று அனுப்பி வைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















