இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த காவல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண் அதிரடிப்படை” பணியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவசர காலங்களில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் “சிங்கப்பெண் அதிரடிப்படை” முக்கிய பங்காற்றும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல் துறை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த புதிய முயற்சி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















