திருநெல்வேலி: திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர், ஒருவர் தனது சமூக வலைதள செயலியில், சீவலப்பேரியை சேர்ந்த அர்ச்சகர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவரின் புகைப்படத்துடன் அரிவாள் மற்றும் இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலான ஒலிப்பதிவை பகிர்ந்தது காவல்துறையினரின் கண்காணிப்பில் தெரியவந்தது. இதுதொடர்பாக, சீவலப்பேரி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் முண்டசாமி(19). என்பவருக்கு தொடvபு இருப்பது தெரியவந்ததை யடுத்து அவரை (05.05.26) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்


















