திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குத்துறை அருகில் (15.04.2026) அன்று காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த சந்திப்பு பகுதியை சேர்ந்த மாரிமுத்து(29). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1.080 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல் மாநகர பகுதியில் மது விலக்கு அமலாக்க காவல் துறையினர், ரோந்து சென்றபோது ராம் தியேட்டர் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பழவூர் பகுதியை சேர்ந்த சிவன் பாண்டியன் (43). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















