திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சிவா(44). என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 23 மது பாட்டில்கள், ரூ.380 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















