கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாகலூர் TO மாலூர் சாலையில் அமைந்துள்ள சம்பங்கிரி சோதனைசாவடி மற்றும் ஜூஜூவாடி RTO சோதனைசாவடி அருகே என இரண்டு வெவ்வேறு இடங்களில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 17 யூனிட் M-Sand இருந்தது. அனுமதியின்றி M-Sand கடத்திய நான்கு குற்றவாளிகளை கைது செய்து M-Sand கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நான்கு குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















