தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இகா.ப அவர்கள் (31.05.2026) ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார். பின்னர் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமராக்களின் கண்காணிப்பு திரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு. செல்வராஜ், திரு. குரு வெங்கட்ராஜ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் இணை ஆணையர் திரு. ராமு ஆகியோர் உடனிருந்தனர்.



















