திருநெல்வேலி: திருநெல்வேலி ஐ.ஆர்.டி பாலிடெக்னிக் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த (18.04.2026) அன்று மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக புகார் ஒன்று முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் குற்றவாளிகளை கண்டறிய தீவிரமாக விசாரணை நடத்திய முன்னீர்பள்ளம் காவல்துறையினர்
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (26). வீர சங்கிலி (20). இசக்கிமுத்து (21). ஒரு சிறுவன் உட்பட நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 29 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.
இக்குற்ற சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்த சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளர் வேல்ராஜ், மற்றும் காவல்துறையினரை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசண்ண குமார்,இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















