கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.என். நகர் தர்கா பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் திரு. நாகசாமி என்பவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து, அங்கு தங்கியிருந்த பெண்களை அச்சுறுத்தி, அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி மேலும் பல குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G. S. அனிதா அவர்களின் பரிந்துரையின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப. அவர்களின் உத்தரவு பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



















