கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (21.02.2020) அன்று நடைபெற்ற கொலை வழக்கில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் விசாரணையை முடித்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள், (30.07.2026) அன்று தீர்ப்பளித்தார். அதில், வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளும் கொலை குற்றத்தை புரிந்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனையும், ₹1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து, காவல்துறையினர் மூன்று குற்றவாளிகளையும் காவலில் எடுத்து, சிறையில் அடைத்தனர்.




















