திருநெல்வேலி: திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்பகை காரணமாக உடையார்குளம் பகுதியைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி (25) மற்றும் கோட்டூரை சேர்ந்த முகமது அன்சாரி (22). ஆகிய இருவரும் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கு திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் (19.05.2026) அன்று குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 8000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெற, கண்காணிப்பு செய்த, திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா, தாலுகா காவல் ஆய்வாளர், சசிகுமார், காவல் உதவி ஆய்வாளர் , சங்கரநாராயணன் (தற்போது காவல் ஆய்வாளர், முக்கூடல்) தலைமை பெண் காவலர், பத்மாவதி, ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார்,இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















