கிருஷ்ணகிரி: மாவட்ட காவல் துறை பத்திரிக்கை செய்திஊத்தங்கரை உட்கோட்டம், கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட A.ரெட்டிப்பட்டி கிராமத்தில் கடந்த (10.06.2025)-ம் தேதி சுமார் 1630 மணியளவில், மாரியம்மன் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது, அவ்வழியாக பள்ளி மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி வாகனத்திற்குள் பட்டாசுகள் பட்டு வெடித்ததில் பள்ளிக் குழந்தைகள் சிலர் காயம் அடைந்து, ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கல்லாவி காவல் வட்ட ஆய்வாளர் திரு.ஜாஃபர் ஹுசைன் அவர்கள் ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, A.ரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமரன் @ வல்லரசு(27), S/o மனோகரன் என்பவர் காவல் ஆய்வாளரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேற்படி சம்பவம் தொடர்பாக கல்லாவி காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்குளில் தொடர்புடைய 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்



















