திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே எரியோடு பண்ணப்பட்டி சாலையில் அமைந்துள்ள இரயில்வே பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் (40). வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் இரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து இரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் தண்டவாளங்களை அனுமதியின்றி கடக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















