திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஐபிஎஸ் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பிரிவு அலுவலகங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அலுவலகங்களின் செயல்பாடுகள், ஆவண பராமரிப்பு, பணியிட ஒழுங்கு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், காவல் அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பார்வையிட்டு சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகளை மதிப்பீடு செய்தார்.
அப்போது அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். தூய்மையான பணிச்சூழல் அலுவலக செயல்திறனை மேம்படுத்துவதுடன், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் தூய்மை, ஒழுங்கு மற்றும் சிறந்த நிர்வாக நடைமுறைகளை உறுதி செய்ய இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















