திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் (NEET) தேர்வை முன்னிட்டு, தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஐபிஎஸ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் செயல்பாடுகள், நுழைவு கட்டுப்பாடுகள், தேர்வர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார்.
தேர்வு மையங்களில் எந்தவித இடையூறும் இல்லாமல் தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேர்வர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் செயல்படவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். மேலும், தேர்வு மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டதுடன், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நீட் தேர்வு அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெற மாவட்ட காவல்துறை முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















