இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்டம், சிக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடம்போடை கிராமத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள 21 கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐபிஎஸ் அவர்கள் திறந்து வைத்தார். குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்கள், கிராமத்தின் முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் குற்றச் செயல்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உதவியாக இருக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி குற்றங்களை கட்டுப்படுத்துவது காவல்துறையின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற கண்காணிப்பு வசதிகள் கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடம்போடை கிராமத்தில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















