திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் ஆகியோரின் உத்தரவின் பேரில், கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம், சார்பு ஆய்வாளர் சஞ்சய் அபினவ் மற்றும் காவல்துறையினர் இணைந்து கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது கோரிக்கடவு பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்திவலசு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு, குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை தொடர்பாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு சென்று, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என காவல்துறையினர் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















