சென்னை: நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில், பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் A. அமீர் அஹமது அவர்களை வடக்கு மண்டல ஊடகச் செயலாளர் மற்றும் நிருபர் எம். முகமது மூசா நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இந்திய அரசியலமைப்பின் சிற்பியும் சமூகநீதிப் போராளியுமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை, சிந்தனைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் நூலை காவல் உதவி ஆணையர் அமீர் அஹமது அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பின்போது, சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு, ஊடகங்களின் சமூகப் பொறுப்பு மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள விழிப்புணர்வு பணிகளில் காவல்துறை ஊடகங்கள் இணைந்து செயல்படுவது குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















