சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை, காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் கைது செய்தனர்.
குற்றவாளியை கைது செய்த காவல் குழுவினரின் சிறப்பான பணியை பாராட்டிய காவல் ஆணையாளர், அவர்களுக்கு வெகுமதி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். குற்றங்களை தடுப்பதிலும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதிலும் காவல்துறையினர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















