சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநராக பணியாற்றி வரும் டிஜிபி சீமா அகர்வால், ஐபிஎஸ் அவர்கள் தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 30-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட சீமா அகர்வால், பல்வேறு நிர்வாக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நியமனத்திற்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




















