சென்னை: காவல் துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த திரு. பி. பகலவன், இ.கா.ப., அவர்கள் (05.06.2026) காலை சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகத்தில் புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின்போது காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து, போக்குவரத்து மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சென்னை போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், புதிய பொறுப்பை ஏற்றுள்ள திரு. பி. பகலவன், இ.கா.ப., அவர்களின் நிர்வாக அனுபவம் போக்குவரத்து காவல்துறையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















