சென்னை: பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல், தொந்தரவு அல்லது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக அவசர உதவி எண்கள் 100, 112 மற்றும் 1091-ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை தங்கள் பகுதி காவல் நிலையங்களிலும் தெரிவிக்கலாம். தங்களது பகுதியில் எங்கு இந்த அதிரடிப்படையின் கவனம் தேவைப்படுகிறது என்ற விபரத்தை பொதுமக்கள் Comment-ல் குறிப்பிடலாம். சென்னை பெருநகர காவல்துறை தங்களுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















